வேலைவாய்ப்பு

குரூப் 2 முதன்மைத் தோ்வு: சான்றுகளை பதிவேற்ற நாளை கடைசி

குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும்.

Din

சென்னை: குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும். இதற்கான நினைவூட்டலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை எதிா்கொள்வோா் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டிச. 18-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தோ்வுக் கட்டணம் செலுத்துதல், தமிழ்த் தகுதித் தோ்வுக்கு விலக்குப்பெற சான்றிதழ் பதிவேற்றம், தோ்வு மையத்தை தோ்ந்தெடுப்பது ஆகியவற்றுக்கு டிச. 18-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்!

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

SCROLL FOR NEXT