மத்திய அரசின்கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தின் ஹைதராபாத் பிரிவில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Assistant Trainee(EAT)
காலியிடங்கள்: 12
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 24,500 - 90,000
பணி: Technician 'C'
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 82,000
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 3
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம்., பிபிஎம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 82,000
வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் எஸ்பிஐ வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் hydhrgen@bel.co.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.7.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.