சட்ட அலுவலர் பணி: 22-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் காலியாக உள்ள சட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் காலியாக உள்ள சட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு தகுதியான வழக்குரைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில், விதி எண்.5(3), சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை சட்ட அலுவலர்கள் (நியமனம்) விதிகள், 2017-ன் கீழ் 37 சட்ட அலுவலர்கள் காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக தகுதியுடைய வழக்குரைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம் தமிழ்நாடு அரசின் இணைய தள முகவரி “http://www.tn.gov.in” - “Announcements மற்றும் “சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் சங்கங்களின் அறிவிப்பு பலகைகள்” மற்றும் “அச்சங்கங்களின் அலுவலக இணைய தளங்களிலும்” தெரிந்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 22.07.2024