யூகோ வங்கி 
வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கியில் உதவித்தொகையுடன் பயிற்சி: 544 காலியிடங்கள்

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கியில் உதவித்தொகையுடன் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கியில் உதவித்தொகையுடன் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Apprenticeship

காலியிடங்கள்: 544

உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் தேர்வு மையம் விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ் நகல்களையும் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் முதலில் தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்ணடும். பின்னர் www.ucobank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.7.2024

மாநிலம் மற்றும் மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரங்களை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT