கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

ரூ.58,100 சம்பளத்தில் தமிழ்நாடு ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஜவுளித்துறை அலுவலகத்தில் ஊர்தி ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஜவுளித்துறை அலுவலகத்தில் (Tamil nadu Textile Department) ஊர்தி ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 2/2024/பி2

பணி: ஊர்தி ஓட்டுநர்

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் 18 முதல் 37 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, பிசிஎம், டிசி பிரிவினர் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tntextiles.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

ஆணையர், துணிநூல் துறை, கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம், முதல் மற்றும் இரண்டாம் தளம், 34, கதீட்ரல் தோட்ட சாலை, நூங்கம்பாக்கம், சென்னை - 600 034.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் முதல் டீசல் வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஏராளமான படங்கள்!

மகன் பிடித்த படங்கள்... மியா!

போர்நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்! காஸாவில் மீண்டும் தாக்குதல்; 33 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

2014-ல் பிரதமர் பதவிக்கு மோடியை நிராகரித்தவரா நிதீஷ் குமார்?

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம் | SC | RN Ravi

SCROLL FOR NEXT