கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் பட்டு தொழில்நுட்ப மையத்தில் வேலை வேண்டுமா?

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், வீவர், டையர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், வீவர், டையர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 25 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறுவதால் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மொத்த காலியிடங்கள்: 59

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள்:

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா - 9, தமிழ்நாடு - 9, ஆந்திரம் மற்றும் தெலங்கானா - 6, பிகார் - 2, சத்தீஸ்கர் - 4, ஒடிசா - 3, வடகிழக்கு மாநிலம் - 11, உத்தரகண்ட் - 7, ஜம்மு - காஷ்மீர் - 4, உத்தரப்பிரதேசம் - 6, மேற்கு வங்காளம் - 4.

காஞ்சிபுரம் மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்

பணி: Master Reeler

பணி: Technician

பணி: Weaver

பணி: Dyer

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ.21,000 மற்றும் இதர சலுகைகள்

தகுதி: குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Reeling, Weaving, Wet processing போன்ற பணிகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பட்டு தயாரிப்பு தொடர்பான, சம்மந்தப்பட்ட பணிகளில் பணி அனுபவம் மற்றும் புதியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Regional Silk Technological Research Station, CSTRI, Central Silk Board, Sirukaveripakkam, Vellore Road, Kanchipuram - 631 502, செல்போன் எண்.9965775223

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் முழுவிவரம் அடங்கிய விண்ணப்பப்படிவம், தேவையான அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

இதேபோன்று பத்து மாநிலங்களில் மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், வீவர், டையர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் நாளை வியாழக்கிழமை( ஜூலை 25) நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

மேலும் விவரங்கள் அறிய www.cstri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

திருமழிசையில் ரூ. 1.24 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி

பள்ளிகளில் மழை நீா் தேங்கும் பிரச்னைகள் தீா்க்கப்படும்: ஆஷிஷ் சூட்

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT