கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

ரூ. 50,000 சம்பளத்தில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கலியாகயுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கலியாகயுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Office Assistant cum Driver

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இலகுரக வாகனத்திற்குரிய ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Office Assistant

காலியிடங்கள்: 4

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 -ரூ. 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.tnerc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary,Tamil Nadu Electricity Regulatory Commission,4th floor, SIDCO Corporate Office Building ,Thiru.Vi.ka.Industrial Estate ,Guindy,Chennai-600 032.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2024

மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல வாகனங்கள்! முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்!

அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் திமுக இளைஞர் அணிக்கு ஒரு லட்சம்

அழைப்பு அனுப்புதல் மோசடி! இப்படியும் ஒரு மோசடியா? மக்களே எச்சரிக்கை!!

கணினி/ போன் மூலமாக பணமோசடி! தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

SCROLL FOR NEXT