வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணி

DIN

சிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 02/2024/CHZ

பணி: Junior Executive (Architecture) - 3

பணி: Junior Executive (Engineering Civil) - 90

பணி: Junior Executive (Engineering Electrical) - 106

பணி: Junior Executive (Electronics) - 278

பணி: Junior Executive (Information Technology) - 13

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் பொறியியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். கணினித் துறையில் எம்சிஏ முடித்திருப்பவர்களும் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 1.5.2024 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2024 தேர்வு மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.5.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்

லபுஷேன் ஹாட்ரிக்: கோப்பையை வென்றது ரெட்லேண்ட்!

நிறைவடைகிறது ஆஹா கல்யாணம் தொடர்!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!

“செங்கோட்டையன் முயற்சிக்கு முழு ஆதரவு” O. Panneerselvam பேட்டி | ADMK | EPS

SCROLL FOR NEXT