முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.80,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 23 நவம்பர், 2024 at 7:55 AM
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம்
பகிர்:

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 383/HR/HLS&SCB 2024-25

பணி: Sr.Filed Operation Engineer(IT Security & Asset Manager)

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ. 80,000

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம் 8 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Field Operation Engineer

பிரிவு: DC Support

காலியிடங்கள்: 4

பிரிவு: IT Support Staff

காலியிடங்கள்: 37

சம்பளம்: மாதம் ரூ. 60,000

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம் 5 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Engineer-I

பிரிவு: Content Writer

காலியிடங்கள்: 1

பிரிவு: IT Help Desk Staff

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ. 40,000

பணி அனுபவம் 2 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trainee Engineer-I(District Technical Support)

காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ. 30,000

பணி அனுபவம் 1 ஆண்டு பெற்றிருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் IT, CS, ECE, Electronics, E&TC, Mechanical, EEE, போன்ற பிரிவிகளில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.11.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.