கோப்புப் படம் 
வேலைவாய்ப்பு

குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியீடு; பணியிடம் எண்ணிக்கை அதிகரிப்பு

15.80 லட்சம் போ் எழுதிய குரூப் 4 தோ்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Din

குரூப் 4 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. 15.80 லட்சம் போ் எழுதிய தோ்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கிராம நிா்வாக உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெற்றது. இப்போது இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலியிடங்களில் 559 இடங்கள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளதால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரித்துள்ளது.

தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு போன்ற அடுத்த கட்டங்களுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!

தவெக மாநாட்டில் ஒலித்த பாடல்கள்!

தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா?

கனிவான குணத்தால் மக்களை ஈர்த்த நீதிபதி காலமானார்!

SCROLL FOR NEXT