வேலைவாய்ப்பு

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஆர்ஆர்ஐ). இந்த நிறுவனம் நிரப்பப்பட உள்ள ஒரு முதன்மையான ஆராய்ச்சி ஆய்வகமாகும்.

DIN

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின்(சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்பட்டு வரும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஆர்ஆர்ஐ). இந்த நிறுவனம் நிரப்பப்பட உள்ள ஒரு முதன்மையான ஆராய்ச்சி ஆய்வகமாகும்.

விமான ஒடு பாதை, சாலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு மற்ரும் நடுத்தர,பெரு நகரங்களுக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டங்கள், சமவெளி, மலைப்பகுதி போன்ற வெவ்வேறு நில சாலைகளின் மேலாண்மை. தரம் குன்றிய கட்டுமான பொருட்களின் மேம்பாடு பற்றி பல்வேறு ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வரும் இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 209 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.CRRI/02/PC/JS-JST/2025

பணி: Junior Secretariat Assistant (Gen/F&A/S&P)

காலியிடங்கள்: 177

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 32

தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://crridom.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.4.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் இன்னும் விஜய் மற்றும் தவெகவை அடிக்க ஆரம்பிக்கவில்லை! - Annamalai | TVK Vijay | BJP

பிப். 9 முதல் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு! சென்னையில் அல்ல பெங்களூரில்!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட்டில் முறைகேடு: 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம்

இனி வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே தொடர்!

ராணி முகர்ஜியின் ஒரேயொரு பியூட்டி சீக்ரெட் இதுதான்!

SCROLL FOR NEXT