இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 76 கிரேடு 'ஏ' மற்றும் 'பி' அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுபற்றிய விபரம் வருமாறு:
அறிவிப்பு எண்.: 03/Grade 'A' and 'B'/2025-26
பணி: Assistant Manager Grade 'A' (General Stream)
காலியிடங்கள்: 50
வயது வரம்பு : 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,500 - 89,150
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிறிருக்க வேண்டும்.
பணி: Manager Grade 'B' (General and Specialist Stream)
i.General
காலியிடங்கள்: 11
தகுதி : ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண் டும்.
ii. Legal
காலியிடங்கள்: 8
தகுதி : சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
iii. Information Technology
காலியிடங்கள்: 7
தகுதி : தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 25 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.55,200 -99,750
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும்,ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1,100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.175.இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.sidbi.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.