தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Pharmacist
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பார்மசி பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி Pharmacy Council-இல் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Lab Technician Grade III
காலியிடங்கள்: 9
சம்பளம்: மாதம் ரூ.13,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் எம்எல்டி தேர்ச்சியும் நல்ல உடற்தகுதியும், பார்வைத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 93
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: General Nursing and Midwifery-இல் தேர்ச்சி அல்லது Nursing பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Indian Nursing Council-இல் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, விண்ணப்பப் படிவத்தின் வலது மூலையில் பாஸ்போட் சைஸ் புகைப்படத்தை ஒட்டி அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
உறுப்பினர், செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், 219 ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் 18 என்ற முகவரிக்கு முகவரிக்கு விரைவுத் தபால் அல்லது நேரிலோ அனுப்பலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.8.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.