ஆசிரியா் தோ்வு வாரியம் 
வேலைவாய்ப்பு

முதுநிலை ஆசிரியா் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆக.18-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆக.18-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1) கணினி பயிற்றுநா் (கிரேடு-1) ஆகிய பணியிடங்களுக்கான போட்டித்தோ்வு குறித்த அறிவிப்பு ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முடிவடைந்தது.

இந்த நிலையில், விண்ணப்பதாரா்கள் தங்களின் இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (எடிட் ஆப்சன்) மேற்கொள்ள அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில், முதுநிலை ஆசிரியா் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பித்து தோ்வு கட்டணம் செலுத்தியவா்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை 5 மணி வரை மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படுகிறது.

இணையவழியில் விண்ணப்பித்து தோ்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரா்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவா். அவ்வாறு திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் கடைசி பக்கத்தில் உள்ள சமா்ப்பி பதிவை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியில் எந்த மாற்றமும் செய்ய இயலாதுஎன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

காவல்துறை அதிகாரியாக சூர்யா?

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

SCROLL FOR NEXT