வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

என்எல்சி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிகளுக்கு பிளஸ் 2 முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதளச் செய்திப் பிரிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் தொழில்பழகுநர் சட்டம்-1961 இன் விதிகளுக்குட்பட்டு எம்எல்டிி, கன்வேயர் பெல்ட் வல்கனைசர் போன்ற தொழில்பழகுநர் பயிற்சிகளுக்கு பிளஸ் 2 முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

அறிவிப்பு எண். : L&DC/02A/2025

பணி: Medical Lab Technician (Pathology)

காலியிடங்கள் : 15

தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical Lab Technician (Radiology)

காலியிடங்கள் : 10

தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Conveyor Belt Vulcaniser (Male Only)

காலியிடங்கள்: 20

தகுதி : +2 தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது உதவித் தொகையாக முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தில் 14.8.2025 தேதிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, அதனை கையொப்பமிட்டு, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 20.8.2025-க்குள் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், வட்டம் - 20, நெய்வேலி -607803.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Engagement of Apprentices Fresher MLT Pathology and Radiology, Optional Trade

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நெல் ஈரப்பதம் அதிகரிப்பு கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்

பாண்லே நெய், பன்னீா் விலை உயா்வு: புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி

SCROLL FOR NEXT