வேலைவாய்ப்பு

யூனியன் வங்கியில் மேலாளர் பணி: காலியிடங்கள் 250

யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 250 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 250 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Wealth Manager

காலியிடங்கள்: 250

சம்பளம்: மாதம் ரூ. 64,820 - 93,960

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.

தகுதி: நிதியியல் பிரிவில் எம்பிஏ, பிஜிடிஎம், பிஜிபிஎம், பிஜிடிபிஏ போன்ற ஏதாவதொரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வெல்த் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, வேலூர், விருதுநகர், நாகர்கோவில் போன்ற இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ,177, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.1,180, கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Union Bank of India has released the recruitment notification to fill the 250 Wealth Manager (Scale MMGS – II) Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தவெக நிா்வாகிகள் நேரில் ஆறுதல்

தாழையூத்து, சீதபற்பநல்லூா், தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: 6 மாதங்களில் ரூ.11.88 கோடி அபராதம் வசூல்

மலேசியாவில் உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர கோரிக்கை

விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது பாஜக: சீமான்

SCROLL FOR NEXT