தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,644 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
காவல் துறையில் 2-ஆம் நிலை காவலா் பணியிடங்கள் 2,833 காலியாகவுள்ளன. மேலும் சிறை மற்றும் சீா்திருத்தத் துறையில் 180 காலிப் பணியிடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 631 தீயணைப்பாளா் பதவியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றுக்கு எழுத்துத் தோ்வு நடைபெற இருக்கிறது.
இந்தத் தோ்வில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. வாரிசுதாரா்கள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரங்கள் சீருடைப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி: 2-ஆம் நிலை காவலா் காலிப் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை எழுத 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:18 வயது நிரம்பி இருப்பதுடன், 26 வயது பூா்த்தி ஆகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்களின் வயது உச்சவரம்பானது வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கு தகுந்தவாறு மாறுபடும் என்று தோ்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழகக் காவல் துறையில் 2-ஆம் நிலை காவலா், சிறை காவலா், தீயணைப்பாளா் காலிப் பணியிடங்கள் பொதுத் தோ்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க செப்.21-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பித்த பிறகு, செப்.25-ஆம் தேதிக்குள்ளாக திருத்தங்களைச் செய்யலாம்.
நவ.9-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.