சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தில் விஞ்ஞானி பணி: உடனே விண்ணப்பிக்கவும்!
சி.எஸ்.ஐ.ஆர். கீழ் செயல்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராயாச்சி மையத்தில் சென்னை பிரிவில் காலியாக உள்ள 30 விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக...
சி.எஸ்.ஐ.ஆர். கீழ் செயல்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராயாச்சி மையத்தில் சென்னை பிரிவில் காலியாக உள்ள 30 விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். SE-2/2025
பணி: விஞ்ஞானி(Scientist)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700
தகுதி: பொறியியல் துறையில் கட்டமைப்பு பொறியியல், பயன்பாட்டு இயக்கவியல், புவி தொழில்நுட்பம் பொறியியல், பெருங்கடல் பொறியியல் அல்லது அதற்கு இணையான பிரிவுகளில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்து பணி அனுவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 22.12.2025 தேதியின் படி 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://serc.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.12.2025
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
CSIR - STRUCTURAL ENGINEERING RESEARCH CENTRE (CSIR-SERC), Chennai is a premier institute under the Council of Scientific and Industrial Research (CSIR), involved in multidisciplinary R&D programmers of both basic and applied nature across scientific disciplines for economic,environmental and societal benefits for the people of India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.