கெயில் இந்தியா 
வேலைவாய்ப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பொதுத்துறை நிறுவனமான 'கெயில் இந்தியா' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமும் இந்தியாவின் முதன்மை இயற்கை எரிவாயு நிறுவனமுமான கெயில் (இந்தியா) லிமிடெட், இயற்கை எரிவாயு மதிப்புச் சங்கிலியின் அனைத்து அம்சங்களையும் (ஆய்வு மற்றும் உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் உட்பட) மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளையும் ஒருங்கிணைத்து வருகிறது. வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், இந்தியாவின் முக்கிய நுகர்வு மையங்களை முக்கிய எரிவாயு வயல்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) முனையங்கள் மற்றும் பிற எல்லை தாண்டிய எரிவாயு ஆதார மையங்களுடன் இணைக்கும் பசுமை ஆற்றல் வழித்தடங்களின் ஒரு நாற்கரத்தை உருவாக்குவதன் மூலம், தூய்மையான எரிபொருள் தொழில்மயமாக்கலின் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி கெயில் முன்னெடுத்துச் செல்கிறது. இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 29

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்

பணி: Chief Manager (Law)- 1

சம்பளம்: மாதம் ரூ. 90,000 - 2,40,000

பணி: Senior Officer (F&A) - 2

பணி: Senior Officer (F&S) - 2

பணி: Senior Officer (BIS) - 1

பணி: Senior Engineer (GAILTEL) - 2

பணி: Senior Engineer (Electrical) - 2

பணி: Senior Engineer (Boiler Ops.)- 3

பணி: Senior Engineer Environmental Engineering)- 1

சம்பளம்: மாதம் ரூ. 60,000 – 1,80,000

பணி: Officer(Official Language)- 1

சம்பளம்: மாதம் ரூ. 50,000- 1,60,000

SPECIAL RECRUITMENT DRIVE FOR PwBD CANDIDATES

பணி: Senior Officer (Marketing) – 1

பணி: Senior Engineer (Mechanical) - 1

பணி: Senior Officer (BIS) - 2

பணி: Senior Engineer (GAILTEL) -1

பணி: Senior Engineer (Instrumentation) - 1

பணி: Senior Officer (C&P)- 2

பணி: Senior Engineer (Electrical) - 1

பணி: Senior Engineer (Civil) - 1

பணி: Senior Officer (HR) – 1

பணி: Senior Officer (Law) – 1

பணி: Senior Officer (Medical Services) – 1

சம்பளம்: மாதம் ரூ. 60,000 – 1,80,000

பணி: Officer (Official Language) – 1

சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,60,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ.,பி.டெக் முடித்தவர்கள், எம்பிஏ., பி.எல்., .சி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 23.12.2025 தேதியின்படி கணக்கிடப்படும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://gailonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ. 200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.12.2025

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

GAIL (India) Limited, invites applications from Indian nationals fulfilling the eligibility criteria for filling up following posts as per category wise vacancies indicated against each post in Table I-A & I-B below for the work-centers/units located in various States across the country

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT