பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 
வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

சென்னையில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Engineer

காலியிடங்கள்: 23

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மெக்கானிக்கல், சிவில் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

எழுத்துத் தேர்வு பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.2.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: பாக். கேப்டன்

What Nonsense is this? மக்களவைத் தலைவர் குற்றச்சாட்டுக்கு பிரியங்கா பதில்!

பிரதமர் மீதான தாக்குதல் ஜனநாயக மரபுகளையே கிழித்தெறியும்: ஓம் பிர்லா

‘எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கிறார்கள்’! எதிர்க்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கஜானாவை நிரப்புவதில் மும்முரம்: பிரதமர் மோடி தாக்கு!

SCROLL FOR NEXT