பொறியாளர் பயிற்சி வேலை 
வேலைவாய்ப்பு

மிஸ்பண்ணிடாதீங்க... பிஹெச்இஎல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 பொறியாளர் பயிற்சி, மேற்பார்வையாளர் பயிற்சி (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

DIN

பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) நிறுவனம் மத்திய அரசின் மின், தொழில் நுட்ப நிறுவனமாகும். கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாட்டின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 பொறியாளர் பயிற்சி, மேற்பார்வையாளர் பயிற்சி (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 03/2025

பணி: Engineer Trainee

காலியிடங்கள்: 150

துறைவாரியான காலியிடங்கள்:

1. மெக்கானிக்கல் - 70

2. எலக்ட்ரிக்கல் - 25

3. சிவில் - 25

4. எலக்ட்ரானிக்ஸ் - 20

5. கெமிக்கல் - 5

6. மெட்டாலார்ஜி - 5

சம்பளம்: மாதம் ரூ. 60,000- 1,80,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், மெட்டாலார்ஜி ஆகிய ஏதாவதொரு

பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Supervisor Trainee (Technical)

காலியிடங்கள்: 250

துறைவாரியான காலியிடங்கள்:

1. மெக்கானிக்கல் - 140

2. எலக்ட்ரிக்கல் - 55

3. சிவில் - 35

4. எலக்ட்ரானிக்ஸ் - 20

சம்பளம்: மாதம் ரூ. 33,500 - 1,20,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.2.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்டி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.1072 செலுத்த வேண்டும். இதர பிரிவினர் ரூ.472 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, அதனை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.2.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

SCROLL FOR NEXT