BEL 
வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பயிற்சி பொறியாளர், புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பயிற்சி பொறியாளர், புராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கு இன்றைக்குள் (ஜன. 31) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trainee Engineer -I

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 40,000

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Engineer - I

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ. 45,000 - 55,000

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது பி.எஸ்சி பொறியியல் முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பெல் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: டிரெய்னி பணிக்கு ரூ.177, புராஜெக்ட் பணிக்கு ரூ.472. கட்டணத்தை எல்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொண்டு, எழுத்துத் தேர்வுக்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடகாஸ்கரில் தீவிரமடையும் ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம்! நாடாளுமன்றம் கலைப்பு!

தீபாவளி திருநாள்: 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் நிறைவு!

இப்ப எப்படி, கம்பீரமா..? பவித்ரா லட்சுமி!

ஆந்திரச் சிறுமிக்கு தங்கள் நாட்டு வழக்கத்தைக் கற்றுத்தந்த ஆஸி. கேப்டன்..! வைரல் விடியோ!

SCROLL FOR NEXT