வேலைவாய்ப்பு

மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.

பணி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - 1

தகுதி: சமூக அறிவியல், வாழ்க்கை அறிவியல்,

ஊட்டச்சத்து, மருத்துவம், சுகாதாரம், மேலாண்மை, சமூகப் பணி, கிராமப்புற மேலாண்மை ஆகிய ஏதொவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: பாலின சிறப்பு நிபுணர் - 1

தகுதி: சமூகப் பணி துறையில் இளநிலைப் லைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,000

பணி: நிதிகல்வியறிவு வல்லுநர் - 1

தகுதி: பொருளாதாரம் அல்லது வங்கியியல் துறை சார்ந்த பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,000

பணி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் மிஷன் சக்தி திட்டம் - 1

தகுதி: கணினி சார்ந்த துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், இணையத்தில் தரவுகளை ஆவணப்படுத்தல், மாநில அல்லது மாவட்ட அளவில் விவசாயிகள் குறித்து அரசு அல்லது அரசு சாரா அல்லது அதன் அடிப்படையிலான நிறுவனங்களுடன் அறிக்கை தாக்கல் செய்தலில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: பல்நோக்கு உதவியாளர் - 1

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,000

விண்ணப்பிக்கும் முறை: கோயம்புத்தூர் மாவட்ட https://coimbatore.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய கட்டம், அறை எண் 5, தரைதளம், மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர். தொலைபேசி எண். 0422 - 2305156

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 20.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

SCROLL FOR NEXT