வேலைவாய்ப்பு

என்டிபிசி பசுமை எரிசக்தி நிறுவனத்தில் பொறியாளர் வேலை: காலியிடங்கள்: 182

புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி வணிகத்தில் முன்னிலையில் உள்ள என்டிபிசி பசுமை எரிசக்தி லிமிடெட்

DIN

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தின் துணை நிறுவனமும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி வணிகத்தில் முன்னிலையில் உள்ள என்டிபிசி பசுமை எரிசக்தி லிமிடெட் (என்ஜிஇஎல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/25

பணி: Engineer(Civil)

காலியிடங்கள்: 40

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Engineer (Electrical)

காலியிடங்கள்: 80

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Engineer(Mechanical)

காலியிடங்கள்: 15

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Executive (HR)

காலியிடங்கள் : 7

தகுதி : ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Management, HR, Industrial Relations, Personnel Management ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்பளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive(Finance)

காலியிடங்கள்: 26

தகுதி: CACMA பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Engineer(IT)

காலியிடங்கள் : 4

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Engineer (Material)

காலியிடங்கள் :10

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து Material Management பிரிவில் முதுகலை டிப்ளமை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு ஆண்டுகளுக்கு ரூ.11,00,000

பொறியாளர் பணிக்கு குறைந்தது 3 வருடங்களும், Executive (HR) 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் 55 சதவிகித மதிப்பெண்களுடன் படிப்பை முடித்து இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் முக்கிய பாடப் பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும் .

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.500. பெண்கள்,எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.ngel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.5.2025

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

மலைத்தேன்... அஞ்சு குரியன்!

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!

SCROLL FOR NEXT