பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் குறித்த விவரங்கள்:
மொத்த காலியிடங்கள்: 103
பணி: Head (Product, Investment & Research)
காலியிடங்கள்: 1
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.1.35 லட்சம்
வயதுவரம்பு: 1.5.2025 தேதியின்படி 35 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Zonal Head (Retail)
காலியிடங்கள்: 4
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.97 லட்சம்
வயதுவரம்பு: 35 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Regional Head
காலியிடங்கள்: 7
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.66.40 லட்சம்
பணி: Relationship Manager-Team Lead
காலியிடங்கள்: 19
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.51.80 லட்சம்
வயதுவரம்பு: 28 முதல் 42-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Investment Specialist (IS)
காலியிடங்கள்: 22
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.44.50 லட்சம்
வயதுவரம்பு: 28 முதல் 42-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Investment Officer (IO)
காலியிடங்கள்: 46
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.27.10 லட்சம்
வயதுவரம்பு: 28 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Development Manager (Business)
காலியிடங்கள்: 2
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.30.10 லட்சம்
வயதுவரம்பு: 30 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Central Research Team (Support)
காலியிடங்கள்: 2
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.20.60 லட்சம்
வயதுவரம்பு: 1.5.2025 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 1.5.2025 தேதியின்படி இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், படிப்பு மற்றும் பணி அனுபவம் குறித்த முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு, தொலைபேசி மற்றும் காணொளி நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதி மற்றும் விருப்பம் உள்ளோர் வங்கியின் https://sbi.bank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.11.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.