இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர்(சிவில்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றும் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். CP/31/25
பணி: Manager(Civil)
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,60,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.11.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு ஹிந்தி, ஆங்கிலத்தில் வினாக்கள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.
உத்தேசமாக எழுத்துத் தேர்வு டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்கள் ரூ.600, இதர அனைத்து பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.