சென்னை அருகே ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். HVF/FTC/RECT/2025/05
பணி: General Manager (Consultant Finance & Accounts) - 1
சம்பளம்: மாதம் ரூ. 1,00,000 + IDA
பணி: Junior Manager (Co-ordinator) - 1
சம்பளம்: மாதம் ரூ. 30,000 + IDA
பணி: Deputy Manager - Web Developer(PHP) - 1
சம்பளம்: மாதம் ரூ. 50,000 + IDA
பணி: Assistant Manager (Document Writer) - 1
சம்பளம்: மாதம் ரூ. 40,000 + IDA
பணி: Junior Manager (Hardware & Networking) - 2
சம்பளம்: மாதம் ரூ. 30,000 + IDA
பணி: Assistant Manager (e-Office) -1
சம்பளம்: மாதம் ரூ. 40,000/- + IDA
பணி: Junior Manager (e-Office) -3
சம்பளம்: மாதம் ரூ. 30,000/- + IDA
பணி: Senior Manager (Server Administrator) - 1
சம்பளம்: மாதம் ரூ. 70,000/- + IDA
பணி: Senior Manager (Cyber Security)- 1
சம்பளம்: மாதம் ரூ. 70,000/- + IDA
பணி: Assistant Manager (Email Administrator) - 1
சம்பளம்: மாதம் ரூ. 40,000/- + IDA
பணி: Manager (AI & New Technology) - 1
சம்பளம்: மாதம் ரூ. 60,000/- + IDA
தகுதி, பணி அனுபவம், உச்ச வயது வரம்பின் சலுகை போன்ற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் தொடர்பான அனைத்து விபரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணத்தை எல்பிஐ வங்கி செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.avnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து அதனை ஸ்கேன் செய்து இணைத்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் விளம்பர எண்ணைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi. Chennai - 600054
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 11.10.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.