ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஈர்ப்பு ஓட்டுநர்
காலியிடங்கள்: 70
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 71,900
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி பிரிவினர் 34-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 42-க்குள்ளும் இருக்க வேண்டும்.
பணி: பதிவறை எழுத்தர்
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ. 15,900 - 58,500
தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி பிரிவினர் 34-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37-க்குள்ளும் இருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 151
சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி பிரிவினர் 34-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37-க்குள்ளும் இருக்க வேண்டும்.
பணி: இரவுக் காவலர்
காலியிடங்கள்: 83
சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி பிரிவினர் 34-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37-க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.100, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2025
மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் பதவி வாரியாக கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.