ஓபிஎஸ்ஸிடம் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஆர்.பி. உதயகுமார்
அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஓ. பன்னீர்செல்வத்திடம் திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஆர்.பி. உதயகுமார்
அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஓ. பன்னீர்செல்வத்திடம் திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், "ஒரு தொண்டன் நாடாள முடியுமா என்ற கேள்விக்கு அதிமுகவில் முடியும் என்பதற்கு சாட்சி ஓ. பன்னீர்செல்வம். இனிமேலும் அவர் என்ன பதவி வேண்டும்?
நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுங்கள். அதுபற்றி கவலையில்லை. ஆனால், அதிமுக இனி ஜெயிக்காது; அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை. தென் தமிழகத்தில் வளர விடமாட்டேன் என்று கூறுகிறார். அவருக்கு மனசாட்சி இருக்கிறதா?
Advertisement
Advertisement
அறிவாலயத்தில் போய்சேர்ந்தபோதே, அவர் செத்த பிணத்துக்கு சமானம். இனிமேல், நீங்கள் எது சொன்னாலும், தொண்டர்களோ மக்களோ நம்பத் தயாராக இல்லை.
அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஓபிஎஸ் மீது திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அவர் ஆரம்பத்திலிருந்தே திமுகவின் மறைக்கப்பட்ட கூட்டாளியாக செயல்பட்டு வந்தாரா? இப்போது, இந்தக் கேள்விதான் தொண்டர்களிடையே அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் சட்ட வழக்குகளில் ஜெயலலிதா குற்றவாளியாக பதவி விலக வேண்டியிருந்தபோது, ஓபிஎஸ் தான் இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றார்.
ஆனால், அந்தக் கடினமான காலங்களிலும் அவர் திமுகவுடன் மறைமுக கூட்டணியில் பணியாற்றினாரா என்பது குறித்து தொண்டர்களில் ஒரு பிரிவினரிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
DMK Chief Stalin should remain cautious of Panneerselvam, says Deputy Opposition leader RB Udhayakumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.