தவெக ஆட்சியில் வெறும் வாய்ஜாலம் மட்டுமே: அதிமுக
தவெக ஆட்சி குறித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் பேசியது பற்றி...
தவெக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, "தமிழ்நாடு இதுவரையில் காணாத படுமோசமான ஆட்சியாக தவெக அரசு இருக்கிறது. இந்த ஆட்சியில் வெறும் வாய்ஜாலம் மட்டுமே இருந்து வருகிறது.
இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான பலனோ நலனோ எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளான பயிர்க் கடன், சிலிண்டர் அறிவிப்பு எதுவும் செயல்படுத்தவில்லை.
Advertisement
Advertisement
தூய்மைப் பணியாளர்களுக்கு நிதி இல்லை எனக் கூறுகிறார். ஆனால், தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மட்டும் எங்கிருந்து ரூ. 1,200 கோடி வந்தது? அவர்களின் திட்டங்கள் அனைத்தும் மாய பிம்பமாகத்தான் இருக்கிறது.
முதல்வர் விஜய் பிரதமராக வருவது சாத்தியமில்லை. தமிழகத்தில் 115 நாள்களிலேயே எந்த நிலைமைக்கு சீரழிந்து விட்டது?
ஒரு அரசு அமைந்தவுடனேயே இவ்வளவு போராட்டங்கள் நடந்து பார்த்துள்ளீர்களா? தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், குடிநீர்ப் பற்றாக்குறை பிரச்னைகள் உள்ளன. முதலில் இங்கு சீர்செய்ய வேண்டும்.
அவர்களை மாநிலத்தின் 35 சதவிகித மக்கள் ஆட்சியில் அமர வைத்துவிட்டனர். இவையெல்லாம் மாய ஜாலமாக நடந்து விட்டதாக அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், அனைத்தும் மாய ஜாலமாக நடந்து விடாது. இந்த ஆட்சியே இன்னும் எத்தனை நாள்கள் என எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்தார்.
The TVK government has not fulfilled its poll promises, ADMK Leader RB Udhayakumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.