FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு? - பாஜக

தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது பற்றி...

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 9:30 pm IST
கொசஸ்தலை ஆற்றில் இறந்துகிடந்த மீன்கள். - படம் - எக்ஸ்
பகிர்:

தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு? என்ற கேள்வியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திங்கள்கிழமை (ஆக. 17) எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

எண்ணூர் கழிமுகத்திற்கு அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்ததால், டன் கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த வருத்தமுமளிக்கின்றன.

Advertisement

Advertisement

சுமார் 8 மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்நிகழ்வை, முதல்வர் விஜய் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கம்போல எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் வைத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையை மூடி மறைப்பதை விட்டுவிட்டு, இறந்த மீன்களை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி, இந்தப் பேரழிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பதை தவெக அரசு மக்கள் முன் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, செத்து மிதக்கும் டன் கணக்கான மீன்களால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக இறந்த மீன்களை அப்புறப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டுமென முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

BJP State President Nainar Nagendran raised the question on Monday (Aug. 17) as to whether the Kosasthalai River is turning into a sewage canal under the TVK government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments