ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஓட்டுநர், கிளார்க் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், கோபிச்செட் டிபாளையம், கொடுமுடி, நம்பியூர், சத்தியமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஈப்பு ஓட்டுநர்(Jeep Driver) - 2
Advertisement
Advertisement
தகுதி: 8-ஆம்வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500-71,900
பணி: இரவு காவலர் (Night Watchman) - 4
தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100
பணி: அலுவலக உதவியாளர்(Office Assistant) - 6
தகுதி: 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100
பணி: பதிவறை எழுத்தர் (Record Clerk) - 2
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,900-58,500
வயது வரம்பு: பொதுப் பிரிவினர்கள் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தாலுகாவில் அல்லது ஊராட்சி ஒன்றிய பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் விண் ணப்பதாரரின் தகுதி, இதர சான்றிதழ்கள் சரிபார்க்கப் படும். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர்களுக்கு ரூ.50. இதர அனைத்து பிரிவினர் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnrd.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கொடுக் கப்பட்டுள்ளது. அதை டவுன் லோடு செய்து, பூர்த்தி செய்து, 30.09.2025 தேதிக்கு முன் ஆன்லைனில் அனுப்பவும். கூடுதல் விபரம் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள் ளது.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
GOVERNMENT OF TAMILNADU RURAL DEVELOPMENT & PANCHAYAT RAJ DEPARTMENT Application for the Vacant Post at Panchayat Union Level
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.