என்எல்சி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்(என்எல்சி) நிறுவனத்தில் ...
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நவரத்னா தகுதி பெற்ற, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்(என்எல்சி) நிறுவனத்தில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்காக ஒரு ஆண்டு காலத்திற்கான 44 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெற்ற நிர்வாகிகளிடம் இருந்து வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive
பிரிவு: Operation
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 17
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிடிஜி, எஸ்எச்எஸ் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
பிரிவு: Maintenance
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.71,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Maintenance ofCivil, Boiler, Turbine, AHS, LHS -இல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 6.10.2025 தேதியின்படி 63-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Health Inspector
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ. 38,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Health Sanitation பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.854, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.354 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.10.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
NLC India Limited, a ‘NAVRATNA’ Public Sector Enterprise is looking for engagement of retired executives (E4 to E6 grade) from Central Public Sector Undertakings on Fixed Term Employment (FTE) basis for a period of One year for operation & maintenance of NLCIL’s Thermal Power Stations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.