பொதுத்துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( எஸ்சிஐ ) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : 06/2025
பணி: Assistant Manager
1.Management
காலியிடங்கள்: 20
தகுதி : Business Management, Shipping, Logistics, Maritime, Supply Chain Management, International Trade, Foreign Trade, Finance ஆகிய பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Finance
காலியிடங்கள்: 8
தகுதி : CA, CMA, ICMA பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. HR, Personnel
காலியிடங்கள்: 4
தகுதி: Personal Management, HRD,HRM,Industrial Relations, Labour Welfare ஆகிய பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Law
காலியிடங்கள் : 2
தகுதி : சட்டப் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5.Civil Engineering
காலியிடங்கள்: 2
தகுதி : Civil Engineering பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6. Electrical Engineering
காலியிடங்கள்: 2
தகுதி: Electrical Engineering பிரிவில் 60% மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும்.
7. Mechanical Engineering
காலியிடங்கள் : 8
தகுதி: Mechanical Engineering-ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8.Information Technology
காலியிடங்கள் : 3
தகுதி: பொறியியல் துறையில் Information Technology, Computer Science ஆகிய பிரிவில் 60 சதகவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் அல்லது Computer Application இல் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
9.Fire & Safety
காலியிடங்கள்: 2
தகுதி : Fire & Safety Engineering பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
10.Naval Architect
காலியிடங்கள் :2
தகுதி: Naval Architecture பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
11.Company Secretary
காலியிடங்கள்: 2
தகுதி: Company Secretary படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 1.8.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,60,000
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, இஎஸ்எம் பிரிவினர் ரூ.100, இதர அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.shipindia.com>Careers>Shore>CurrentRecruitment> என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.9.2025
மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.