வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 'பி' கிரேடு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்.30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officers (Grade-'B' General (DR))
காலியிடங்கள்: 83
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officers (Grade-'B'(DR) - DEPR)
காலியிடங்கள்: 17
தகுதி: Economics, Finance, Business Economics, Agricultural Economics, Industrial Economics, International Finance, Quantitative Techniques, Banking and Trade Finance போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officers (Grade-'B'(DR) - DSIM)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.78,450
தகுதி: புள்ளியியல், கணிதப் புள்ளியியல், கணிதப் பொருளாதாரம், பொருளாதார அளவியல், புள்ளியியல் மற்றும் தகவலியல், பயன்பாட்டுப் புள்ளியியல் மற்றும் தகவல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.9.2025 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், தஞ்சாவூர், வேலூர்,விழுப்புரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெறும்.
தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு 18.10.2025 அன்று நடைபெறும். இரண்டாம் கட்டத் தேர்வு 6.12.2025 அன்று நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி. இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.850+18% ஜிஎஸ்டி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ 100 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2025
மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.