முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளர் பணி!

பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு...

Updated On : 8 ஏப்ரல், 2026 at 9:33 AM
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் - கோப்புப்படம்
பகிர்:

பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். PN-REC-ADV-DM-2026-01

Advertisement

பணி: Deputy Manager

பிரிவு : Deputy Project Manager

காலியிடம்: 1

தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, தொலைத்தொடர்பு ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: Cyber Security Expert

காலியிடம்: 1

தகுதி: பொறியியல் துறையில்

கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பிரிவு : Procurement Manager

காலியிடம்: 1

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்

பிரிவு: QA Manager

காலியிடம்: 1

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்

பிரிவு: OHSE Manager

காலியிடம்: 1

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்

பணி அனுபவம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 8.4.2026 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.472. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப் பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ,அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

AGM (HR & A), Bharat Electronics Limited (BEL), Pune Unit, NDA Road, Pashan, Pune 411021.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.4.2026

summary

Bharat Electronics Limited, a Navaratna Company and India’s premier professional electronics Company under the Ministry of Defence requires following Professionals for..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments