மெட்ரோ ரயில்வேயில் உதவி மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
நொய்டாவில் உள்ள மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகவுள்ள உதவி மேலாளர் பணிகள் குறித்து...
இந்திய அரசும் உத்தரப்பிரதேச அரசும் இணைந்து அமைத்த கூட்டு முயற்சி நிறுவனமான நொய்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகவுள்ள உதவி மேலாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NMRC/HR/Rectt./02/2026
பணி: Assistant Manger
Advertisement
Advertisement
பிரிவு: Projects - Civil
காலியிடம்: 1 (UR)
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Architect
காலியிடம்: 1 (UR)
தகுதி : பொறியியல் துறையில் Architecture பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Electrical
காலியிடம்: 1 (UR)
தகுதி : பொறியியல் துறையில் Electrical Engineering பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Information Technology
காலியிடம்: 1 (UR)
தகுதி : பொறியியல் துறையில் Information Technology,Computer Science & Engineering பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Property Business
காலியிடம் : 1 (UR)
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Human Resource
காலியிடம்: 1 (UR)
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் வணிக நிர்வாகப் பிரவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.50,000 - ரூ.1,60,000
வயதுவரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்போருக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nmrcnoida.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து
கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவுத் தபாலில் அனுப்பவும். விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது பணியின் பெயர் மற்றும் விளம்பர எண்ணைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager/Projects & HR, Noida Metro Rail Corporation Limited, Block III, 3rd Floor, Ganga Shopping Complex -Sector 29, Noida-201 3015 Distt. Gautam Budh Nagar, UP.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.4.2026
மேலும் விண்ணப்பிப்போரின் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
NMRC To meet the immediate requirement of experienced personnel(s) in NMRC, fresh applications are invited from experienced, dynamic and motivated officers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.