தமிழ்நாடு வனப்பகுதி அனுபவங்கள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ்நாடு வனப்பகுதி அனுபவங்கள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்து...
தமிழ்நாடு முழுவதும் சூழல் சுற்றுலாத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் 2021-இல் தொடங்கப்பட்ட அரசு நிறுவனம் தமிழ்நாடு வனப்பகுதி அனுபவங்கள் நிறுவனம். இதன் பதிவு அலுவலகம் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் அமைந்துள்ளது. நிலையான மற்றும் அனுபவத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் அளித்து, சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்திற்காகத் தமிழ்நாடு அரசின் ஒரு சிறப்பு நோக்க நிறுவனமாக இந்நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர், கணக்கு உதவியாளர், விற்பனைத் திட்ட உதவியாளர், மற்றும் சுற்றுலாத்தல மேலாளர் ஆகிய 8 காலிப் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆக.8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பார்ப்போம்...
Advertisement
Advertisement
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Administrative Officer – 1
தகுதி: எம்பிஏ, மேலாண்மை பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 வழங்கப்படும்
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Associate (Technical) – 1
தகுதி: சுற்றுலா, விருந்தோம்பல், சூழல் சுற்றுலா, ஹோட்டல் நிர்வாகம் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000 வழங்கப்படும்
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Co-ordinator – 2
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பயணம், சுற்றுலா, விருந்தோம்பல், வணிக நிர்வாகம் அல்லது மேலாண்மை ஆகியற்றில் முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Accounts Assistant – 1
தகுதி: வணிகம், பொருளாதாரம், கணக்கியல் மற்றும் நிதியியல் ஆகிய ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Associate (Sales) – 1
தகுதி: மேலாண்மை துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சந்தை மற்றும் விற்பனை பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 1 முதல் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Naturalist – 1
தகுதி: லைப் சயின்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Destination Manager – 1
தகுதி: சுற்றுலா, பயணம், விருந்தோம்பல், வணிக நிர்வாகம் அல்லது மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tnwec.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
TNWEC has officially announced a massive 2026 recruitment Notification to fill 8 Administrative Officer, Associate (Technical), Project Co-ordinator, Accounts Assistant, Project Associate (Sales), Destination Manager vacancies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.