மாவட்ட சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்...
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார மையங்களில் வேலைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள்(ம) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட கீழ்வரும் முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்...
பணி: Lab Technician Gr-III
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 3
தகுதி: டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Occupational Therapist(DEIC)
காலியிடம் : 1
தகுதி: Occupational Therapy-ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,000
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: District Programme Manager
காலியிடம்: 1
தகுதி: பிஏஎம்எஸ் தேர்ச்சியுடன் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.42,000
வயதுவரம்பு: 59-க்குள் இருக்க வேண்டும்.
பணி: RMNCH+ A Counseller (Female only)
காலியிடங்கள்: 2
தகுதி: Social Work,Public Administration, Psychology, Sociology, Home science, Hospital & Health Management பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,000
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Cum Data Entry Operator
காலியிடம் :1
தகுதி: ஏதாவதொரு பாடப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,500
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: ULB -UHN/ANM
காலியிடங்கள்: 75
தகுதி: + 2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு எஎன்எம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,500
வயது வரம்பு: 35- க்குள் இருக்கவேண்டும்.
பணி: Cleaner
காலியிடங்கள்: 2
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.11,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: htpps://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, விண்ணப்பப் படிவத்தில் தற்போதைய புகைப்படத்தை ஒட்டி கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
உறுப்பினர் செயலாளர், மாவட்ட காதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் -18.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Applications are invited from eligible candidates for the following vacant posts on a contractual basis under the District Health Society, Coimbatore District
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.