மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 312 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மூத்த விளம்பர ஆய்வாளர் - 15
பணி: ஆய்வக உதவியாளர் தரம் III - 39
பணி: இளநிலை மொழிபெயர்ப்பாளர், ஹிந்தி - 202
பணி: பணியாளர் மற்றும் நலத்துறை ஆய்வாளர் - 24
பணி: அறிவியல் உதவியாளர் (பயிற்சி) - 2
சம்பளம்: மாதம் ரூ.35,400
பணி: தலைமை சட்ட உதவியாளர் - 22
சம்பளம்: மாதம் ரூ.19,900
பணி: அரசு வழக்குரைஞர் - 7
பணி: அறிவியல் மேற்பார்வையாளர், பணிச்சூழலியல் மற்றும் பயிற்சி - 1
சம்பளம்: மாதம் ரூ.44,900
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருப்பதோடு, மக்கள் தொடர்பு, விளம்பரம், இதழியல் துறையில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் மூத்த விளம்பர ஆய்வாளர் பணிக்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுடன் பிளஸ் 2 அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் ஆய்வக உதவியாளர் பணிக்கும், சட்டத் துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக 3 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் தலைமை சட்ட உதவியாளர் பதவிக்கும், ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் அல்லது அதற்குச் சமமான பட்டம் பெற்றிருப்பவர்கள் இளநிலை மொழிபெயர்ப்பாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறனறித் தேர்வு, திறன் தேர்வு, மொழிபெயர்ப்புத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.1.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.