அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.63,200 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

தினமணி


இந்திய அஞ்சல் துறையின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழக அஞ்சல் ஊர்தி சேவை திறன்வாய்ந்த கைவினைக் கலைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்தகு தகுதியானவர்களிடம் இருந்து வரும்
ஜனவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Skilled Artisans - 07

1. M.V.Mechanic(Skilled) - 4
2. M.V.Electrician(Skilled) - 1
3. Copper and Tinsmith (Skilled) - 1
4. Upholster(Skilled) - 1

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

எம்.வி.மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிப்போர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தொழிற் முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indiapost.gov.in இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் சுவா் ஓவியங்கள்: கல்வித்துறை உத்தரவு

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் சிவப்புக் கம்பள வரவேற்பு

சென்னையில் 8 மணிநேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

வேலூரில் வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT