அரசுப் பணிகள்

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 

இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சென்னை பிரிவில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு

தினமணி

இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சென்னை பிரிவில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 12, 13, 14 மற்றும் 15 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம். 

பணி மற்றும் காலியிடங்கள்: 
பணி: வாடிக்கையாளர் சேவை நிர்வாகி
காலியிடங்கள்: 144
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 12, 13 மற்றும் 14 

பணி: யுடிலிட்டி ஏஜென்ட் மற்றும் ரேம்ப் ஓட்டுநர்
காலியிடங்கள்: 15
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.11.2022 

பணி: ஹேண்டிமேன்
காலியிடங்கள்: 150
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.11.2022

நேர்முகத் தேர்வு குறிப்பிடப்பட்ட தேதிகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரை.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஏச்ஆர்டி துறை அலுவலகம், ஏஐ யூனிட்டி வளாகம், பல்லாவரம், கன்டோன்மென்ட், சென்னை - 600 043. 

மேலும் விவரங்கள் அறிய  
www.aiasl.in., www.aiahl.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT