அரசுப் பணிகள்

நில அளவர், வரைவாளர் பணி: மதிப்பெண், தரவரிசை வெளியீடு!

அளவர், உதவி வரைவாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான மதிப்பெண்கள், தரவரிசையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)வெளியிட்டுள்ளது.

DIN


நில அளவர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர், உதவி வரைவாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான மதிப்பெண்கள், தரவரிசையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)வெளியிட்டுள்ளது.

நில அளவைப் பதிவேடுகள் பிரிவில் நில அளவர், வரைவாளர் காலிப் பணியிடங்கள் 1,338 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த தேர்வை 29,882 பேர் எழுதினர். அவர்களில் 27,827 பேரின் மதிப்பெண்கள், தரவரிசை விவரங்களை அரசுப்  பணியாளர் தேர்வாணைய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

இதேபோன்று தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக ஆர்வலர் பணியிடங்கள் 16 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த தேர்வை 350 பேர் எழுதினர். அவர்களில் 310 பேரின் மதிப்பெண்கள், தரவரிசை விவரங்களை அரசுப்  பணியாளர் தேர்வாணைய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரெளடிகள் தகராறு: போலீஸாா் விசாரணை

தமிழகத்தில் 1,303 நீலகிரி வரையாடுகள்: அமைச்சா் ராஜகண்ணப்பன் தகவல்

திருச்சானூரில் வரலட்சுமி விரதத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT