அரசுப் பணிகள்

முத்திரைத்தாள் அச்சகத்தில் டெக்னீசியன் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மகாராட்டிரா மாநிலம், மும்பையில் செயல்பட்டு வரும் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள 65 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மகாராட்டிரா மாநிலம், மும்பையில் செயல்பட்டு வரும் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள 65 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:  Junior Technician (Fitter) 
காலியிடங்கள்: 24 (எஸ்சி-5, ஒபிசி-6, பொருளாதார பிற்படுத்தப்பட்டோர்-2, பொது-11).

பணி:  Junior Technician (Turner)
காலியிடங்கள்: 4 (எஸ்டி-1, பொது-3)

பணி:  Junior Technician (Attendant Operator-Chemical Plant) 
காலியிடங்கள்: 11 (எஸ்சி1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1,பொது-7)
பணி: Junior Technician (Moulder) 3 (பொது)
பணி: Junior Technician (Heat Treatment) : 2 (பொது)
பணி: Junior Technician (Foundryman/ Furnaceman)
காலியிடங்கள்: 10 (எஸ்சி-1,எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, பொது-5)
பணி: Junior Technician (Blacksmith) 
காலியிடங்கள்: 1 (பொது)
பணி: Junior Technician (Welder)
காலியிடங்கள்: 1 (பொது)
பணி: Junior Technician (Carpenter)
காலியிடங்கள்: 1 (பொது)
சம்பளம்: மாதம் ரூ.18,780- 67,390.

வயது வரம்பு :15.07.23 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் என்சிவிடி, எஸ்சிவிடியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior OfficeAssistant 
காலியிடங்கள்: 6 (எஸ்சி-1,எஸ்டி-1, ஒபிசி-2, பொது-2).

பணி: Junior Bullion Assistant
காலியிடங்கள்: 2 (எஸ்சி1, எஸ்டி-1)

சம்பளம்: மாதம் ரூ.21,540-77,160
வயது வரம்பு: 15.07.23 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணியாற்றவும், நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 40 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

பணி எண் 10 மற்றும் 11-க்கு கணினி வழித் தேர்வு மூலமும், இதர பணிகளுக்கு திறனறிவுத் தேர்வு (ஸ்கில் டெஸ்ட்)  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்:  எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ. 200, பொது, ஒபிசி, பொருளாதார பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் ரூ. 600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://igmmumbai.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைலைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.07.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT