அரசுப் பணிகள்

தொடக்கக் கல்வி ஆசிரியா் பயிற்சி: ஜூன் 5 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சியில் சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூன் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

DIN

சென்னை: தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சியில் சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூன் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எஸ்சிஇஆா்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களை https://scert.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் ஜூன் 5 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவ்வாறு இயலாத நிலையில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரா்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT