அரசுப் பணிகள்

இந்திய அஞ்சல் துறையில் 1,899 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

RECRUITMENT OF MERITORIOUS SPORTS PERSONS IN TIIE DEPARTMENT OF'POSTS IN THE CADRES OF POSTAL ASSISTANT, SORTING ASSISTAIT, POSTMAN, MAIL GUARD AND MULTI TASKING STAFF.

தினமணி


மத்திய, மாநில மற்றும் சர்வதேச நிலைகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 1,899 அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், தபால்காரர் மெயில்கார்டு, பல்நோக்குப் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 1,899 (இதில் 361 இடங்கள் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது)

பணி: அஞ்சல் உதவியாளர் (Postal Assistant) - 598 
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: அஞ்சல் பிரிப்பு உதவியாளர் (Sorting Assistant) - 142 
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: தபால்காரர் (PostMan) -585 
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

பணி: மெயில்கார்டு (Mail gaurd) - 3 
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

பணி: பல்நோக்குப் பணியாளர் (Multi Tasking Staff) - 570 
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட மாநிலங்களின் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, கபடி, மல்யுத்தம் என பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள 63 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

தேசிய விளையாட்டு கூட்டமைப்பு செயலாளரிடம் இருந்து இந்திய நாட்டின் சார்பாக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அல்லது மாநில விளையாட்டு அமைப்பு செயலாளரிடம் இருந்து மாநிலங்கள் சார்பில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கல்லூரி முதல்வர் , இயக்குநர் அல்லது பல்கலைக்கழகத்தின் விளையாட்டு பொறுப்பு அதிகாரியிடம் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பல்கலைக்கழகம் சார்பாக கலந்து கொண்டதற்கான சான்றிதழ் அல்லது மாநில கல்வித் துறை இயக்குநரிடம் இருந்து பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18  முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். பல்நோக்குப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தவும். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விகிதங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள்  https://dopsportsrecruitment.cept.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 9.12.2023

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிதம்... விதி யாதவ்!

"துலாம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

கண் கவர் பொருங்கோட... மேகா!

பரோடா வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT