இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை வேண்டுமா?
வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 450 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 450 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Reserve Bank of India
பதவி: உதவியாளர்(Assistant)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 450
தகுதி: 1.9.2023 தேதியின்படி, ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.9.2023 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகை குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.20,700 -55,700
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் மொழி திறன் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதல்நிலைத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்
முதன்மைத் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, திருச்சி திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50 + 18 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதர அனைத்து பிரிவினரும் ரூ.450 + 18 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.10.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.