முகப்பு
தேசியச் செய்திகள்

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On : 27 பிப்ரவரி, 2019 at 6:52 PM
பகிர்:

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் இருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் புரளி என்று தெரியவந்ததையடுத்து அந்த விமானம் 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

இதனிடையே நடைபெற்ற விசாரணையில் அதே விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்த பயணி தான் அதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஐடி ஊழியரான அவர், தனது குடும்பத்துடன் அந்த விமானத்தில் பயணிக்க டிக்கெட் பதிவு செய்திருந்தார். ஆனால், அவர்கள் விமான நிலையம் வந்தடைய தாமதமான காரணத்தால் போர்டிங் பாஸ் மறுக்கப்பட்டது.

Advertisement

இதனால், அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் நடைபெற்ற சோதனையில் இவ்விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த பயணி சிறையில் அடைக்கப்பட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.