டிச. 31 நெருங்குகிறது. 
என்ன செய்ய வேண்டும்

பான் அட்டை வைத்திருக்கிறீர்களா? டிச. 31ஆம் தேதியே கடைசி! தவறினால் ஆபத்து!!

பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில் உள்ள பெரும்பாலானோர் தங்களது ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு நடவடிக்கையை ஏற்கனவே முடித்திருப்பார்கள். ஆனல், இதுவரை செய்யாதவர்களுக்கு, டிச. 31 கடைசி நாள்.

இந்திய வருமான வரித்துறை, பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைத்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுளள்து. இதற்கான கடைசி தேதி டிச. 31, 2025 ஆகும். ஆனால், இதற்குள் ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்கத் தவறினால் உங்களது பான் எண் செயல்படாததாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) இணைக்க மத்திய அரசு பல முறை காலக்கெடுவை நீட்டித்துள்ள நிலையில், இதுவே கடைசி முறை என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், இதுவரை ஆதார் எண்ணுடன் பார் எண்ணை இணைக்காதவர்கள் தற்போது இணைக்கும் முன் அதற்குரிய அபராதமாக ரூ.1000 செலுத்த வேண்டும். அதே வேளையில், 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்குப் பிறகு, பான் அட்டை வாங்கியவர்கள், டிச. 31ஆம் தேதி வரை இலவசமாகவே ஆதார் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

பான் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண் செல்லாததாகிவிடும்.

அதனால், ஒருவர் செலுத்திய வரி மற்றும் வரி பிடித்தங்கள் மீண்டும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து பெற முடியாது.

ஏற்கனவே பிரிவு எக்ஸ்விஜேஜே-பி மற்றும் எக்ஸ்விஜேஜே-பிபி-ன் கீழ் ஒருவர் வரி செலுத்தி வந்தால், பான் எண் செல்லாததாக மாறும்போது, இனி முறையே 206ஏஏ மற்றும் 206சிசி -ன் கீழ் அதிக வரி பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

you have a PAN card Dec. 31st is the last day If you miss it, you will be in danger!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026-ல் செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்! (துலாம்- மீனம்)

ரூ. 16 லட்சம் நகைகள் திருட்டு... செய்யறிவால் வேலை இழந்த ஐடி ஊழியர் தோழியுடன் கைது!

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்... ரயில்வேயில் 22 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா! எந்தெந்தப் பொருள்களுக்குத் தடை?

மலேசியாவில் விஜய்!

SCROLL FOR NEXT