முகப்பு
ஆன்மிகம்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம்

மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளியபடி மாசி வீதிகளில் உலா வந்தனர். மீனாட்சி அம்மனுக்கு 25ஆம் தேதி பட்டாபிஷேகம், மறுநாள் திக் விஜயம், 27ஆம் தேதி திருக்கல்யாணம் என அடுத்தடுத்து விமரிசையாக உற்சவங்கள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கிடையே மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர், பிரியாவிடையும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தனித் தனி தேர்களில் பவனி வந்தனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ் உள்ளிட்ட பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →